படிகாரம் உடலுக்கு தரும் நன்மைகள் தெரியுமா உங்களுக்கு
சித்த மருத்துவத்தில் சீனக்காரம் என அழைக்கப்படும் படிகாரம் பொதுவாக வீட்டின் முன்பாக திருஷ்டிக்காக கட்டியிருப்பார்கள். இந்த படிகாரக்கல் நம்முடைய முன்னோர்களின் ஒரு அவசர மருத்துவ பொருளாக இருந்து வந்துள்ளது.
சிறிய காயங்கள் முதல் உடல் வலி போன்ற பல உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு இந்த படிகாரக்கல்லை நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.அப்படி நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இந்த படிகாரக்கல்லின் ஒரு சில மருத்துவ பயன்களை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
முகப்பரு மறையும்
முகத்தின் அழகு குறைய முக்கிய காரணமாக இருப்பது முகப்பரு. இந்த முகப்பருவை போக்க படிகாரம் நமக்கு உதவி செய்கிறது.படிகாரத்தை (alum) சிறிதளவு எடுத்து அதனை தண்ணீரில் கரைத்து அந்த தண்ணீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும்.
இவ்வாறு ஒரு சில நாட்கள் செய்து வர முகப்பரு மற்றும் முகப்பருவினால் ஏற்பட்ட தழும்புகள் மறைந்து விடும்.
இருமல் சரியாகும்
இருமல் பிரச்சனையை சரிசெய்வதற்கு படிகாரம் ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஒருசிலருக்கு தண்ணீர் மாறி குளித்தாலோ அல்லது தண்ணீர் மாறி பருகினாலோ உடனே அவர்களுக்கு இருமல் மற்றும் ஜலதோஷ பிரச்சனை வந்து விடும்.
இதை சரி செய்ய படிக்காரத்தூளை சிறிதளவு தேனில் கலந்து நன்றாக குழைத்து தினமும் இருவேளை என்று தொடர்ந்து சில நாட்கள் வரை சாப்பிட்டு வர இருமல் பிரச்சனை சரியாகும்.
மூக்கடைப்பு பிரச்சனை விலகும்
பாலில் சிறிது அளவு திப்பிலியை மண் பானையில் 10நிமிடம் ஊறவைக்கவும்.பின் ஊறிய திப்பிலி மற்றும் கஸ்தூரி மஞ்சள்ஆகியவைகளை தனித்தனியே அரைத்து பின் சந்தனக்கட்டையை கல்லில் தேய்த்து விழுதாக்கி, அத்துடன் சிறிது படிகாரத்தூளை சேர்த்து நன்கு கலக்கி தினமும் இருவேளை இதை சிறு உருண்டையாக்கி உட்கொள்ள மூக்கடைப்பு குணமாகும்.
நகச்சுற்று குணமாகும்
நகச்சுற்று என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் ஏற்படும் நோய் ஆகும்.இந்த நோயை குணப்படுத்த படிகாரம்(alum) மிகவும் உதவிகின்றது. இந்த படிகாரத்தை நன்கு அரைத்து அதை நகச்சுற்று உள்ள நகங்களில் போடவும் வேண்டும்.இப்படி செய்து வர இந்த நோய் அகலும்.
கால்களில் வெடிப்பு நீங்கும்
அதிகளவு கால் பகுதியில் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் இரவு தூங்குவதற்கு முன் படிகாரம் கற்களை எடுத்து வெடிப்பு உள்ள இடத்தி நன்றாக தேய்த்து வர சில நாட்களிலேயே கால்களில் உள்ள வெடிப்புகள் மறைந்து விடும்.
முகம் அழகு பெறும்
முகத்தில் ஏற்படும் தழும்புகள் நீங்கவும் முகப்பருக்கள் மற்றும் முகப்பருக்களால் ஏற்படும் கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்கி, முகப் பளபளப்பு பெற படிகார கல் உதவுகிறது. சிறிதளவு படிகார கல் பொடியை எடுத்து நன்கு கலக்கி முகத்தில் தடவி 15நிமிடம் கழித்து கழுவி வர பருக்கள் நீங்கி பளபளப்பு உண்டாகும்.
கண் பாதிப்புகள் சரியாகும்
படிகாரத்தூள் மற்றும் மஞ்சளை பன்னீரில் கலந்து இரவு முழுவதும் வைத்துவிட்டு காலைவில் அந்த நீரில் கண்களை கழுவி வர கண்களில் ஏற்பட்ட கட்டிகள் குணமாகி கண்களில் ஏற்படும் சிவப்பு படலம் நீங்கிவிடும்.
மேலும் படிகாரத்தூளை முட்டையின் வெண் கருவில் கலந்து அதை ஒரு மெல்லிய துணியில் நனைத்து கண்களின் மேல் வைத்து கட்டிவர கண் வலி உடனே குறையும்.
சீதபேதி நீங்கும்
உடல் சூட்டினால் ஏற்படும் சீதபேதிக்கு படிகாரம் பயன்படுகிறது.நாம் பயன்படுத்தும் சிறிய வெங்காயத்தில் சிறிது படிகாரத்தூளைக் கலந்து அதை இரண்டு வேளை தினமும் உண்டுவர சூட்டினால் ஏற்பட்ட சீத பேதி நீங்கி விடுதலை பெறலாம்.
மூக்கில் ரத்தம் வடிவதை தடுக்கும்
ஒரு சிலருக்கு, மூக்கின் இரத்தம் வடியும் நோய் இருக்கும். அந்த நோய் இருப்பவர்கள் படிகாரத்தூளை தண்ணீரில் கலந்து அந்த நீரை மூக்கில் ஓரிரு துளிகள் விட்டு மூக்கின் மேல் படிகாரத் தண்ணீரில் நனைத்த ஒரு துணியை வைத்துவர சிறிது நேரத்தில், மூக்கில் இருந்து இரத்தம் வடிவது நின்று விடும்.
வாய்புண் சரியாக
காரம் நிறைந்த உணவுகளை அதிக அதிகம் உட்கொள்ளும்போதும் உடலின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும் போதும் வாய்ப்புண் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இந்நோயை எளிதில் போக்க மாதுளம் பூ மற்றும் மாதுளம் பட்டை சிறிது எடுத்து நீரில் கொதிக்கவைத்து அதில் சிறிது படிகாரத்தூள் கலந்து வாய் கொப்புளித்து வர வாய்ப்புண் உடனே ஆறிவிடும்.
மேலும் கடுக்காய்த் தூளை படிகாரத்தூளில் கலந்து, அவற்றை, வெதுவெதுப்பான நீரில் இட்டு நன்கு கலக்கி அந்த நீரில் வாயைக் கொப்புளித்துவர வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண் பாதிப்புகள் விலகிவிடும்.
வியர்வை துர்நாற்றம் நீங்க
வியர்வை துர்நாற்றம் உள்ளவர்கள் படிகாரம் கற்களை உடம்பில் தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் கெட்டநாற்றம் நீங்கி விடும்.
பல் வியாதிகள் விலகிவிடும்
பல் ஈறுகளில் இருந்து சிலருக்கு கெட்ட ரத்தம் வரும்.இப்பிரச்சனையை போக்க படிகாரத்தூளை தேனில் கலந்து பல் ஈறுகளில் தடவி வர ஈறுகளில் ஏற்பட்ட காயங்கள் ஆறிவிடும்.
மேலும் கடுக்காய் தூள் பாக்குத்தூள் மற்றும் படிகாரத்தூள் இவற்றை சேர்த்து வைத்துக்கொண்டு தினமும் இந்த தூளில் பல் துலக்கிவர பல் வலி, ஈறு வீக்கம் போன்ற பல் வியாதிகள் யாவும் விலகிவிடும்.
இரத்தக்கட்டுகள் கரைய
இரத்தக்கட்டு ஏற்பட்ட இடத்தில் படிகாரத்தூள் மற்றும் செம்மண் இவற்றை முட்டையின் வெள்ளைக்கருவுடன் கலந்து நன்கு அரைத்து அதை இரத்தக்கட்டுகள் இருக்கும் இடத்தில் தடவி வர இரத்தக்கட்டுகள் உடனே கரைந்து விடும்.