Featured Post

Greenways True Beauty Soap

  Packing Size: 100gm MRP: Rs.140/- The Great Benefits Of Using Herbal Soaps: Herbal soap would not dry out your skin or cause any skin irr...

கரோனாவும் கபசுரக் குடிநீரும்


Dr.Maheswari Lifegreen Hospital:
கரோனாவும் கபசுரக் குடிநீ
ரும்

கபசுரக்குடிநீர் ஒரு சித்தமருத்துவ மரபு மருந்து. சித்தமருத்துவ அடிப்படையில் *"சுரங்களின் வகை 64" என்கின்றது "யூகி வைத்திய சிந்தாமணி" என்னும் நூல். ”சுரங்கள் எப்படி எப்படியெல்லாம் வரும், சுரங்களின் போது எந்தெந்த குறிகுணங்கள் காய்ச்சலோடு சேர்ந்து நிற்கும்? அந்த சுரத்தை குறிப்பிட்ட மருந்துகளை வைத்துக் குணப்படுத்தாது போனால், அது சன்னியாக எப்படி மாறும்? என்னும் அபாயத்தையும் சித்த மருத்துவத்தில் விளக்கும் முக்கிய நூல் அது. கபசுரம் அப்படிச் சொல்லப்பட்ட சுர வகைகளுள் ஒன்று. மூன்று நான்கு நாட்களில் அதை குணப்படுத்த வேண்டும். அப்படி குணப்படுத்த இயலாது போகையில் அது "அபன்னியாச சன்னியாக"மாறும் என்றும், அந்த அபன்னியாச சன்னி குணப்படுத்த மிக கடினமான அசாத்திய நோயாகவும் அந்த நூல் விவரிக்கின்றது. 

* இதுகாறும், சித்த மருத்துவர்கள், இந்த கபசுரத்தை வைரல் நிமோனியாவிற்கு, அதை ஒட்டிய சுரத்திற்கு பயன்படுத்தி வந்தோம்.
கபசுரத்தின் குறிகுணங்களாக கூறப்பட்ட குரல் கம்மல், இருமல், மூச்சிரைப்பு, சுரம் போன்ற முக்கிய குணங்கள் கோவிட் - 19 நோயிலும் முக்கிய குறிகுணங்களாக இருந்ததால், ”அந்த கபசுரத்துக்கு பயன்பட்ட ஒரு மருந்தை நாம் ஏன் இந்த புதிய கோவிட் நோய்க்கு முயற்சிக்கக் கூடாது? ஆய்ந்தறியக் கூடாது?”, என சித்தமருத்துவ மூத்த வல்லுனர்கள் ஆலோசித்து தேர்ந்தெடுத்துச் சொன்ன மருந்துதான் கபசுரக்குடிநீர். இதனை 15 மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கச் சொல்லியுள்ளது *”சித்த மருத்துவத் திரட்டு” என்னும் சித்த மருத்துவ நூல். ஆயுஷ் துறையின் சித்த மருத்துவ பார்மகோபியா குழு வெளியிட்டுள்ள "Siddha formulary of India" நூலிலும் இந்த மருந்து செய் வழிமுறை அரசு ஆவணமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.*

சுக்கு, திப்பிலி, அக்கிரகாரம், கிராம்பு, கடுக்காய், சீந்தில், கோரைக்கிழங்கு, கற்பூரவல்லி, கறிமுள்ளி, நிலவேம்பு, ஆடாதோடை, சிறுகாஞ்சொறி, வட்டத்திருப்பி, சிறுதேக்கு, கோஷ்டம் ஆகிய இந்த முலிகைகள் கொண்ட கசாயத்தின் ஒவ்வொரு தாவரமும் பல மருத்துவ குணங்களைக் கொண்டது.
அதன் மருத்துவத்தன்மை பின்வருமாறு:

சுக்கு (ஜின்ஜிபெர் அஃபிஸினாலே) - மனித நுரையீரல் திசுக்களைத்தாக்கும் சின்சிஷியல் வைரஸுக்கு எதிரான ஆன்டிவைரல் பண்பைக் கொண்டது.
திப்பிலி (பைப்பர் லாங்கம்) மற்றும் கிராம்பு (ஸிஸிஜியம் அரோமாட்டிகம்) இரண்டுமே திசு அழற்சிகளைக் குறைக்கும் தண்மை, நுரையீரல் பாதை பாக்டீரிய தொற்றுக்களுக்கு எதிராக செயலாற்றும் தன்மை, வலி அகற்றி தன்மை உடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளையும்  கொண்டது.
சிறுகாஞ்சொறி (ட்ரேஜியா இன்வால்யூக்ரேட்டா) கடுமையான காய்ச்சலுக்கான  சுரமகற்றி, மற்றும் எதிர் நுண்ணுயிரி பண்புகளைக் கொண்டது.
அக்கிரகாரம் (அனாஸிகுலஸ் பைரத்ரம்) திசுக்களின் அழற்சிகளை நீக்கும் ஆற்றல் கொண்டது.
கறிமுள்ளி (ஸோலனம் அங்கிவி) சளியை நீக்கி நுரையீரலை பாதுகாக்கும் பண்பைக் கொண்டது.

கடுக்காய் (டெர்மினலியா செபுலா) எச்.எஸ்.வி-2-க்கு எதிரான ஆன்டிவைரல் பண்பையும், ஆன்டி-ஆக்ஸிடன்ட், இருமல் நீக்கும் பண்புகளையும் கொண்டது.

ஆடாதோடை (ஜஸ்டிஸியா ஆடாதோடா) ஹெர்பிஸ் சிம்ப்ளெக்ஸ் வைரஸுக்கு(Herpes Simplex Virus) எதிரான ஆன்டி-வைரல் பண்பைக் கொண்டது.

கற்பூரவல்லி (ப்ளெக்ட்ரோன்தஸ் அம்பாய்னிகஸ்) மூச்சுக்குழலை விரிவடையச் செய்யவும் அப்பகுதியில் அழற்சியை நீக்கவும் வலியை அகற்றவும் கூடவே ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளையும் கொண்டது.

கோஷ்டம் (சௌஸூரியா கோஸ்டஸ்) ஈரலைப் பாதுகாக்கும்,  அழற்சி நீக்கும் தன்மையையும் உடையது. ஆன்டி-இன்ஃப்லமேட்டரி,

சீந்தில் (டினோஸ்போரா ஸினென்ஸிஸ்) நோய் எதிர்ப்பாற்றலை சீராக்கவும் எய்ட்ஸ் நோய் கிருமியான எச் ஐ வி(H.I.V.) கிருமியின் செயலை மட்டுப்படுத்தும் தன்மையும் கூடவே பல நுண்ணுயிரிகளை எதிர்க்கும் வலிமையும் கொண்டது.

சிறுதேக்கு (ரோத்தெக்கா செரேட்டா) எதிர் நுண்ணுயிரி பண்பைக் கொண்டது. அதனாலேயே காச நோய்க்காக பெரிதும் ஆய்வு செய்யப்பட்டது.

நிலவேம்பு (ஆண்ட்ரோகிராஃபிஸ் பானிகுலேட்டா)  பல வைரஸ்களுக்கு எதிரான ஆற்றலும், ஈரலை தேற்றும் தன்மையும், எதிர் நுண்ணுயிரி ஆற்றலும்  நோய் எதிர்ப்பாற்றலைச் சீராக்கும் பண்புகளையும் கொண்டது.
வட்டத்திருப்பி (சிஸ்ஸாம்பெலோஸ் பேரெய்ரா) நான்கு டெங்கு வைரஸ் செரோ வகைகளுக்கு எதிரான ஆன்டி-வைரல் பண்புகளையும், வலி நீக்கி, ஆன்டி-ஆக்ஸிடன்ட், அழற்சியையும் சுரத்தையும் நீக்கும் பண்புகளையும் கொண்டது.

கோரைக்கிழங்கு (சைப்பரெஸ் ரோடாண்டஸ்) எச்.எஸ்.வி-க்கு  எதிரான ஆன்டி-வைரல் பண்பையும் அழற்சி நீக்கியாகவும் ஆண்டி- ஆக்சிடண்ட் டாகவும் பயன்படும் தன்மை கொண்டது.
இந்த கபசுரக்குடிநீரின் சிறப்பே இதன் மிகத் துல்லியமான மூலிகைக் கலவை. ”பித்தமாய்க் காத்து“  என்பது சித்த மருத்துவ நோய்த்தடுப்பின் வழிகாட்டுதல்.அந்த அடிப்படையில் பித்தத்தை சீராக்கி வைத்திருக்க உதவும் மூலிகைகளின் தொகுப்பே ”கபசுரக் குடிநீர்”. இதில் உள்ள முக்கிய க
ூறுகளான சுக்கு, வட்டத்திருப்பி, கடுக்காய், நிலவேம்பு, ஆடாதோடை அத்தனையும் பல்வேறு வைரஸ் நோய்களுக்காக ஆய்ந்தறியப்பட்டவை.
குறிப்பாக, இதில் சேர்க்கப்படும் ”வட்டத்திருப்பி” டெங்கு நோயின் மூன்று வைரஸ் பிரிவுகளில் பணியாற்றுவது நிரூபிக்க்கப்பட்டு இன்று "காப்புரிமை"(Patent Rights)வரை பயணிக்கின்றது.
நிலவேம்பும் ஆடாதோடையும் இங்கு மட்டுமல்லாமல் உலகின் பல ஆய்வகங்களில் ஃபுளூ சுரங்கள் முதல் புற்று வரை மிக நேர்த்தியாக பல நோய்களில் ஆராயப்பட்டும் பயன்படுத்தப்பட்டும் வரும் மூலிகை.
உலக சுகாதார நிறுவனம் தன்னுடைய அறிவுறுத்தலில், இப்படியான மருந்தேதும் கண்டறியப்படாத இக்கட்டான காலகட்டத்தில், வழக்கமான படிப்படியான ஆய்வுகளுக்காக காத்திராமல், "Monitored Emergency Use of Unregistered and Investigational Interventions"(MEURI) என்கின்ற வழிகாட்டுதலில் ஏற்கனவே பிற நோய்களுக்குப் பயன்பட்ட மருந்துகளை சோதனை அடிப்படையில் முயற்சிக்க  வலியுறுத்துகின்றது. இந்த வழிகாட்டுதலையும் கொண்டே கபசுரக்குடிநீரை தமிழக அரசின் சித்தமருத்துவர்கள் குழு தேர்ந்தெடுத்துள்ளது.

இவை மட்டுமல்லாது, 1.இன்று கணிணி உதவியுடன் நடத்தப்படும் உயிரி தகவலறிதல் தொழில் நுட்பம் (Bioinformatics) மூலம் நடத்தப்பட்ட "Docking Studies"இலும் கபசுரக்குடிநீரின் மூலக்கூறுகள் இந்த வைரசின் ஸ்பைக் புரதத்தில்(Spike Glycoproteins) இணைந்து பணியாற்றும் முதல்கட்ட ஆய்வும் வெளியாகி உள்ளது. 2.சில ஆண்டுகளுக்கு முன்னரே எம் ஜி ஆர் மருத்துவப்பல்கலைக்கழக மேற்படிப்பு மாணவர் ஒருவர் நடத்திய ஆய்வில் இதன் நஞ்சில்லா பாதுகாப்பு (எலிகளில் நடத்தப்படும் "Acute Toxicity Study") அறியப்பட்டு பாதுகாப்பானது என்றும் தெரியவந்துள்ளது.

இந்த மூலிகைகளை மிகச் சரியாக இனங்கண்டறிந்து, தாவரவியல் அடையாளங்களின் படி, தர நிர்ணயம் செய்து, அப்படி செய்த மூலிகைகளை குறிப்பிட்ட அளவு சூரிய ஒளியில்/ நிழலில் உலர வைத்து, ஆயுஷ் துறையின் மருந்துசெய் "Good Manufacturing Practices"(GMP) வழிகாட்டுதல்படி கசாயச் சூரணமாக தயாரிக்கப்படுகின்றது. அதற்குரிய GMP சான்று பெற்ற மருந்தகங்கள் மாநில அரசின் மருந்துத்தயாரிப்பு
உரிமைப்பெற்று இதனை தயாரிக்கவும் விற்பனை செய்யவும் முடியும்.
   கபசுரக்குடிநீரை விநயோகிக்கும் வழிகாட்டுதலையும் அரசுக்கு சித்தமருத்துவர் குழு தெரிவித்துள்ளது. சரியான தர நிர்ணயம் உள்ள இந்த குடிநீரை மாநில அரசின் தலைமை அலுவலகம் மூலம், அத்தனை மாவட்டங்களுக்கும் வழங்கவேண்டும். முதலில் , நோய்த்தொற்று பெற்றவரின் தொடர்பிலிருந்த தற்போது தடுப்பு ஒதுக்கத்தில்(Quarantine & Containment Zone) உள்ள நபர்களுக்கும், முதல் நிலை மருத்துவப் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்; “பொதுவாக யார் வேண்டுமானாலும் கசாயம் காய்ச்சிக் கொடுக்கும் நிலை கூடாது.  *"அரசு சித்த மருத்துவ அலுவலர் அனுமதியின்றி பொது விநியோகம் கூடாது”* உள்ளிட்ட கசாயம் பெறுவோருடைய அத்தனை விவரமும் கணிணி செயலி(App) மூலம் மத்திய சித்த மருத்துவ கவுன்சில் வழி நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கசாயத்தைத் தயாரிக்க 10கிராம் பொடியைப் போட்டு, இரு குவளை நீர் விட்டு 1/2 டம்ளராக(நான்கிலொரு   பங்காக)காய்ச்சி,

வடிகட்டி இளஞ்சூட்டோடு பருகுவது நல்லது. வயது,உடல் எடை,பிற நோய்கள் இருந்தால் எத்தனை நாள் சாப்பிட வேண்டும்? இதே அடர்வு வேண்டுமா? என்பதை மருத்துவரை தொலைபேசியில் அணுகி ஆலோசனை செய்து சாப்பிடவும். பொதுவாகவே சித்த மருத்துவம் தனி நபர் அவர் வாழ்வியல், நோய் மரபு சார்ந்து தனித்துவ வழிகாட்டுதல் (Personalised Care) தேவைப்படும் மருத்துவம். சளியோ, காய்ச்சலோ , குரல் கம்மலோ, இரைப்போ வந்தால் நீங்களாக வீட்டில் இதை சாப்பிடுவது நல்லதல்ல. அரசு மருத்துவரை அணுகி விபரத்தை சொல்லி மருத்துவம் செய்ய வேண்டும்.
  தமிழக அரசின் நோய்க் காப்புத் திட்டமான "ஆரோக்கியம்" திட்டத்தில், இந்த குடிநீர் மட்டுமல்லாது நோய் சிகிச்சை முடிந்த பின்னர் நோய் பெற்றவர் உடல் உறுதி பெற, "அமுக்கரா சூரண மாத்திரை" மற்றும் "நெல்லிக்காய் இலேகியம்" வழங்கப்பட உள்ளது.
அமுக்கரா இன்று உலக மருந்தியல் ஆய்வுகளில் "Therapeutic Vaccine" அளவிற்கு முன்னேறிய உடல் ஊக்கம் தரும் மருத்துவ மூலிகை.
நெல்லிக்காய் மிகச்சிறந்த "விட்டமின் சி" சத்து நிறைந்த நோய் எதிர்ப்பாற்றல் தரும் சித்தமருத்துவ காயகற்ப மூலிகை.

இந்த அரசாணையில், நோய்த்தொற்று உள்ள குறிகுணமில்லாத (Asymptomatic Positives) அல்லது ஆரம்பகட்ட நோயருக்கு (Patients with Mild Disease) , நவீன  மருத்துவ அறிஞர்களோடு இணைந்து செயலாற்ற வழிகாட்டுதலும் வழங்கப்பட்டுள்ளது. அப்படியான சோதனைமுயற்சிக்கு உரிய ஒப்புதலை மத்திய அரசின் நோயர் சோதனை நெறி குழுவிடம் (Institutional Ethical Committee) பெற இந்திய முறை மருத்துவ இயக்குனருக்கு(Directorate of Indian Medicine & Homeopathy) அறிவுறுத்தப்பட்டுள்ளது.

*நவீன மருத்துவமும் இந்திய முறை மருத்துவமும் ஒருங்கிணைந்து பணியாற்